வவுனியாவில் கட்டுப்பணத்தை செலுத்திய தமிழர் மரபுரிமை கட்சி
நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான கட்டுபணத்தை தமிழர் மரபுரிமை கட்சியினர் வவுனியா தேர்தல்கள் ஆனைக்குழுவில் செலுத்தியுள்ளனர்
குறித்த கட்டுபணம் அக்கட்சியின் தலைவர் நேசராசா சங்கீதன் தலைமையில் இன்றைய தினம் (02) செலுத்தப்பட்டுள்ளது
முல்லைத்தீவில் சுயேட்சைக்குழு
இந்நிலையில், பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர், “தாங்கள் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் முல்லைத்தீவில் சுயேட்சைக்குழுவாக போட்டியிட்டு பல பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டுள்ளோம்.
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இளம் சமூதாயத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்பதோடு அதற்கான தளத்தை தாங்கள் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமது கட்சியானது வடக்கு மற்றும் கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈசல்கள் போல பாய்ந்து வந்த ஈரானின் ஹைபர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணைகள்! திருப்பி அடிக்கத் தயராகும் இஸ்ரேல்!!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
