ஏழு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 7 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இன்று (02) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள்
இதன்படி, கியூபா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஈசல்கள் போல பாய்ந்து வந்த ஈரானின் ஹைபர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணைகள்! திருப்பி அடிக்கத் தயராகும் இஸ்ரேல்!!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |