தம்பலகாமம் மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாயிப் நகர் கோயில் அடி வீதி மற்றும் வெம்பு கொளனி வீதி மிக மோசமாக பாதிப்படைந்து உள்ளது.
இப்பிரதான வீதியூடாக நாளாந்தம் மாணவர்கள் பொதுமக்கள் என பல் வேறு அசெளகரியங்களுக்கு மத்தியில் பயணம் செய்கின்றனர்.
எனவே இவ்வீதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வீதி புனரமைப்பு
குறித்த வீதி காபட் வீதியாக அமைக்கப்பட்ட போதிலும் நடுவில் பாரிய சேதம் மற்றும் பள்ளம் படுகுழி காணப்படுவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியை புனரமைக்க தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி விஜயம் செய்து பார்வையிட்டார். மிக நீண்ட காலமாக இவ்வீதி புனரமைக்கப்படவில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதி ஊடாக தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை, பாடசாலை போன்றவற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது.






