வவுனியா- முல்லைத்தீவு பேருந்தில் பெண் ஒருவரின் தாலிக்கொடி திருட்டு! பொலிஸார் தீவிர விசாரணை
வவுனியா – முல்லைத்தீவு பேருந்தில் சென்ற பெண் ஒருவரின் தாலிக்கொடி திருடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தாலிக்கொடியை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, குறித்த பெண் அதனை தனது தோளில் தொங்கவிட்டிருந்த கைப்பைக்குள் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து அவர் தனது கைப்பையைத் திறந்து தொலைபேசியை எடுத்து உரையாடியுள்ளார்.
மேலதிக விசாரணை
அப்போது பேருந்தில் பயணிகள் நெரிசலாக இருந்ததுடன், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் நெருக்கமாகப் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர், குறித்த பெண்ணுடன் நெருக்கமாக நின்றிருந்த நிலையில், அவரது கைப்பையை அவதானித்து, அதற்குள் இருந்த தாலிக்கொடியை திருடியதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் தங்களது நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை மிகவும் அவதானமாகப் பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.