தமிழர்களின் ஆலயங்களை அழிக்கும் அரசாங்கத்திற்கு தையிட்டியை உடைப்பதில் என்ன தடை.. சிறீதரன் எம்.பி கேள்வி
கடந்த கால அரசாங்கங்களும் மற்றும் அநுர அரசாங்கமும், இராணுவ இயந்திரத்தை வைத்துக்கொண்டு தமிழ் மக்களை ஆக்கிரமிப்பதும், தமிழ் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதை தான் பிரதான நோக்கமாக கொணடுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்றையதினம் (3) நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
தையிட்டி போராட்டம் வன்முறையான போராட்டமல்ல, யாருடைய ஆலயங்களையும் இடிக்க வேண்டும் என்ற போராட்டமல்ல.
பல ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்து - கிருஸ்தவ ஆலயங்களை தரைமட்டமாக்க இந்த அரசாங்கங்களினால் முடியுமானால் 4 ஆண்டுகளுக்குள் வலுக்கட்டாயமாக அமைக்கப்பட்ட விகாரையை இடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க என்ன தடை என்று கேள்வியெழுப்பியுள்ளார்.