தையிட்டியில் வெடிக்கும் பாரிய போராட்டம்! வேலன் சுவாமிகள் எச்சரிக்கை
தையிட்டியில் நாளையதினமும்(3) பாரிய எழுச்சி போராட்மொன்று நடைபெறவுள்ளது, இவ்வாறான போராட்டங்களின் ஊடாகதான் அடக்குமுறைகளை வெல்ல முடியும் என்று நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள், தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மக்களிடமிருந்து எங்களை அந்நியப்படுத்தி இவ்வாறான சித்திரவதைகளை தருவதனூடாக போராட்டத்தை கைவிட்டு விடுவோம் என்ற நிலையில் சிங்கள் பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் உள்ளது.
அதனுடைய ஒரு கட்டமாகதான் 26ஆம் திகதியிடப்பட்டிருந்த வழக்கு 5ஆம் திகதியே முன்கூட்டி திகதியிடப்பட்டுள்ளது.
அநுர அரசாங்கமும் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எந்தவித்திலும் விதிவிலக்கான அரசாங்கம் அல்ல.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தின் போது பொலிஸாரின் கன்னத்தில் அறைந்த துறவி மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காணவும்..
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri