தையிட்டியில் போராட்டத்திற்குள் புகுந்த பொலிஸார்! வன்மையாக கண்டித்துள்ள P2P இயக்கம்
தையிட்டியில் சாத்வீகமாக முன்னெடுத்த போராட்டத்திற்குள் புகுந்து பொலிஸார் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டினை வன்மையாக கண்டிப்பதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்ட இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(23.12.2025)மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தையிட்டியில் உள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொலிஸார் மிக காட்டுமிராண்டித்தனமாக ஈனத்தனமாக நடந்து அதிலும் ஒரு சமயத்தலைவராகிய தவத்திருவேலன் சுவாமிகளை கடுமையாக தாக்கி கைதுசெய்து அதன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றார்.

தையிட்டியில் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு விகாரை ஒரு ஆக்கிரமிப்பாக சட்ட விரோதமாக கட்டப்பட்ட விகாரையாகும். தையிட்டியிக்குட்பட்ட வலிவடக்கு பிரதேசசபையின் விகாரை சட்ட விரோத விகாரையென தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
அதற்கு அரச கட்சி உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினார்கள். சட்ட விரோத விகாரை என்ற பதாகையிடவேண்டும் என்று அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது.அதற்கான சாத்வீகபோராட்டமே முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸாரின் செயற்பாடு
அந்த போராட்டத்திற்குள்ளே வந்து குவிந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி,அதிலும் மிக மோசமாக தவத்திரு வேலன் சுவாமிகளை தாக்கி கைதுசெய்திருந்தனர்.அதன்தாக்கத்தின் விளைவாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சைபெற்றுவருகின்றார்.
பொலிஸாரின் இந்த காட்டுமிராண்டித்தனமான,அராஜகமான,ஈனத்தனமான செயற்பாட்டினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

நாடளாவிய ரீதியில் சட்டத்திற்கு முரணாக பௌத்த பிக்குகள் ,பௌத்த சமய தலைவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்துகின்றபோது பொலிஸாரின் கட்டளைகளை மீறுகின்றபோது அவர்களை எதுவும் செய்யாத பொலிஸார்,பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட தேரரைக்கூட கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தாத பொலிஸார் சாத்வீகமான முறையில் நீதிக்காக போராடிய சமயத்தலைவர் ஒருவரை இவ்வாறு மோசமாக தாக்கி கைதுசெய்தமை தற்போதுள்ள அரசாங்கத்தின் உண்மையான முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதை காட்டுகின்றது.
தையிட்டி சம்பவம்
சமாதானத்தினை உருவாக்குவோம்,நாட்டினை மீளகட்டியெழுப்புவோம் என்ற கோசத்துடன் இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை குறித்து ஒரு வரிகூட பேசாத இந்த அரசாங்கம் இவ்வாறான சாத்தவீக போராட்டத்தினை,நீதிக்காக போராடியவர்கள் மீது தொடர்ந்தும் இவ்வாறான மிலேச்சத்தனமாக செயற்பட்டு அவர்களை கைதுசெய்தது என்பது கடந்த அரசுகள் செய்த அதே செயற்பாட்டினைத்தான் இன அடக்குமுறையைத்தான் செயற்படுத்துகின்றது என்பதை தையிட்டி சம்பவம் சிறப்பாக படம்பிடித்துக்காட்டியுள்ளது.

சமயத்தலைவர்களாகிய நாங்கள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் இந்த செயற்பாட்டினை வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறு போராட்டத்தினை அடக்கி போராடும் மக்கள் மீது தமது வன்மத்தையும் வெறியாட்டத்தினையும் பாவித்து அவர்களை அடக்கும் செயல் என்பது இன்றும் இலங்கையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam