தையிட்டி காணி அளவீட்டை நிறுத்தியது அதிகாரிகளே..! உரிமையாளர்கள் குற்றச்சாட்டு
தையிட்டி விகாரை விவகாரத்தில் எப்படியாவது காணிகளை அளவீடு செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரிகள் செயற்பட்டார்கள். அதற்கு நாங்கள் இடம் கொடுக்காத நிலையில், எம்மீது பழியை சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றார் என சட்டவிரோதமாக கடப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை அமைவிடக் காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
விசனம் தெரிவித்த காணி உரிமையாளர்கள்
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே திகதி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் கடந்த 28ஆம் திகதி தையிட்டி அளவிடும் பணிகள் முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அழைக்கப்படாத குழுவினரும், கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த நில அளவையியலாளர்களும் மட்டுமல்லாது தொல்பொருள் திபைக்கள அதிகாரிகள், திஸ்ஸ விகாரை மற்றும் வெடுக்குநாறி விகாரைகளின் பிக்குகள் என சந்தேகத்துக்கிடனான பலர் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த காணி அளவீட்டை எழுத்து மூலம் முறையான சட்டப் பிரகாரம் முன்னெடுக்குமாறு நாங்கள் கோரிக்கை முன்வைத்திருந்தோம். ஆனால் முறையான கடிதத் தலைப்பற்ற ஒரு தாளில் பல்வேறு மயக்கங்களுடன் உறுதியான சட்ட ஏற்பாடற்ற கருத்துடன் ஒரு இணக்கப்பாட்டு சான்று எம்மிடம் மாவட்ட செயலாளரினால் காணிக்கப்பட்டது.
ஆனால் எமக்கு குறித்த அளவீட்டில் சந்தேகம் ஏற்பட்டதால் நாம் அந்த சான்றில் வலுவான சொற்பதங்களை இணைக்க வேண்டும் என்றும், கடிதத் தலைப்பில் அதை எழுதி குறித்த அதிகாரிகளுடைய கையொப்பத்துடன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தோம்.

இதனைத் தொடர்ந்து, எங்களது கோரிக்கைக்கு மாவட்ட செயலர் ஒத்துழைக்கவில்லை. மாறாக வாய்வழியாக சொல்வது உத்தரவாதமாகும் என்றும் அதனை ஏற்குமாறும் வற்புறுத்தினார். அதனை நாங்கள் ஏற்காத காரணத்தினால் அவர்கள் எம்மீது வீண்பழி போடுகிறார்கள்.
இதேவேளை, இவ்வாறானவர்கள் எமக்கு மக்கள் பிரதிநிதிகளாக தேவை இல்லை. அப்படியான பிரதேச சபையும் எமக்கு தேவை இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைனில் தனியார் வான் பாதுகாப்புப் படைகள் அறிமுகம்: முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்க புதிய முயற்சி