பேருந்துக்குள் உயிருக்கு போராடிய பயணிகள் - பொலிஸாரிடம் அவசர உதவி கோரிய மக்கள்
பொகவந்தலாவையில் நேற்று இரவு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனில் இருந்து ராணிகாடு வரை பயணித்த குறித்த பேருந்தின் சாரதி, மிக மோசமான மதுபோதையில் பேருந்தை செலுத்துவதாக அதில் பயணித்த பயணிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மர்மமாக இருக்கும் ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள்! குற்றவாளிகளாக சிறைசென்று புலனாய்வாளர்களாக வெளியில் வந்த அதிசயம்
ஓட்டுநர் கைது
இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பேருந்தைப் பின்தொடர்ந்து சென்று பொகவந்தலாவை - கேம்பியன் நகரில் வைத்து பேருந்தை மறித்து சாரதியைக் கைது செய்தனர்.
ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நேரத்தில் பேருந்தில் சுமார் 25 பயணிகள் இருந்ததாக தெரியவந்துள்ளது.

பயணிகளை மாற்றுப் பேருந்துகளில் அவர்கள் சேருமிடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஓட்டுநர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொகவந்தலாவை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவுப்படைகளால் இருமுனைத் தாக்குதல்: நெருக்கடியில் மத்திய கிழக்கு News Lankasri