தாய் மடி அமைப்பின் இயக்குநரை விசாரணைக்கு அழைக்கும் பொலிஸார்
தாய் மடி அமைப்பின் இயக்குநரும் முன்னாள் போராளியும் நலிவுற்றோருக்கான செயற்பாட்டாளர் முன்னாள் போராளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நோக்கி தனது வாழ்வாதார மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வரும் அலன்டீலன் விசாரணைக்கு அழைக்கக்கப்பட்டுள்ளார்.
இந்த அழைப்பானது இன்று (06.06.2023)பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இவர் விசாரணைக்கு அழைக்கப்படுவதுடன் அவரது வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவரது மனைவியின் அடையாள அட்டையையும் பதிவு செய்துள்ளமை அவரது குடும்பத்தவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனு வழங்கப்படல்
இந்த விடயம் குறித்து அனைத்து தூதரகங்களுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் மனு அளிக்க உள்ளதாக ஈழ தேசிய இளைஞர் பேரவையின் ஊடக இணைப்பாளர் சர்வானந்தா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
