இலங்கையிலிருந்து தாய்லாந்திற்கு மீண்டும் அனுப்பப்படும் சாக் சுரின் யானை
இலங்கையில் நோய்வாய்ப்பட்ட தாய்லாந்து யானையான சாக் சுரின், திட்டமிட்டபடி ஜூலை முதலாம் திகதி தாய்லாந்திற்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்படும் அளவுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பூங்காக்கள், வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புத்துறையின் படி, சக் சுரின் உடல்நிலை கணிசமாக மேம்பட்டுள்ளதுடன், அது நல்ல மனநிலையில் உள்ளதாகவும், தாய் மொழியில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் புரிந்துகொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்து கால்நடை மருத்துவர்கள் குழுவினால் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், யானையின் முதுகில் இருந்த இரண்டு புண்கள் குணமாகி வருகின்றன.
வாடகை விமானம் ஏற்பாடு
இந்த நிலையில் ஜூலை முதலாம் திகதியன்று இலங்கையில் இருந்து சியாங் மாய்க்கு வாடகை விமானம் சுமார் ஆறு மணி நேரம் பயணிக்கவுள்ளது.
அதேநேரம் பயணத்தின் போது யானையை அடைத்து வைப்பதற்காக பிரத்தியேகமாக கட்டப்படும் கூண்டு, ஏறக்குறைய நிறைவடைந்து, அடுத்த 7 நாட்களில் இலங்கைக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2001 ஜனவரி 8 ஆம் திகதியன்று 30 வயதான சாக் சுரின் தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
