மற்றுமொரு யானைக்கும் மருத்துவ உதவி: தாய்லாந்து வெளியிட்ட தகவல்
தாய்லாந்துக்கு நோய்வாய்ப்பட்ட நிலையில் முத்துராஜா யானையை அழைத்துச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, இலங்கையில் உள்ள மற்றொரு யானைக்கும் மருத்துவ உதவியை வழங்க தாய்லாந்து அரசு முன்வந்துள்ளது.
குறித்த யானையும் தாய்லாந்து மன்னரால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட நிலையில், அதன் உடல்நிலை குறித்து தாய்லாந்து அரசினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தற்போது கண்டியில் தலதா மாளிகையில் உள்ள ‘பிரது பா’ என்ற யானையை அதன் வயது காரணமாக தாய்லாந்திற்கு கொண்டு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து மருத்துவக் குழு
இந்நிலையில், தாய்லாந்து மருத்துவக் குழுவொன்று சில வாரங்களில் இலங்கைக்கு வருகைதந்து மருத்துவப் பயிற்சி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு இலங்கை நிபுணர்களுக்கு உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய விமானம் மூலம் 22 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த 30 வயதுடைய முத்துராஜா யானை, தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்டது.
தாய்லாந்தின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன், நாடு திரும்பிய முத்துராஜா யானையின் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி அளித்ததுடன், தற்போது ஒரு மையத்தில் 30 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
