தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல்
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் (ஜனாதிபதி சார்பில்), பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் உட்பட மொத்தம் 27 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சி
கடந்த பெப்ரவரி மாதம் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கை வந்திருந்தபோது, தமது சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியில், இலங்கை, தாய்லாந்துடனான வரலாற்று வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்நிலையில், இலங்கையின் 37வது ஏற்றுமதி இடமான தாய்லாந்து, 2022 இல் 495 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் கணிசமான பொருளாதார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
அத்துடன் தாய்லாந்து 2005 முதல் 2022 வரையான காலப்பகுதியில் 92 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நேரடி முதலீட்டை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |