தாய்லாந்து பிரதமரை சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார் ரணில்
இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றுள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கையை வந்தமைந்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதமர், 76வது சுதந்திர விழாவில் கௌரவ அதிதியாகவும் பங்கேற்கவுள்ளார்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
இந்த விஜயத்தின் போது, தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், வரலாற்று சிறப்புமிக்க இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதையும் பார்வையிட உள்ளார்.
மேலும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் தாய்லாந்தின் துணைப் பிரதமரும், வர்த்தக அமைச்சருமான பும்தம் வெச்சயாச்சாய் மற்றும் இலங்கையின் வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ ஆகியோர் கைச்சாத்திடவுள்ளனர்.

அத்தோடு, இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் வாயிலாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை அதிகரிப்பதற்கும், ஆசியான் பொருளாதாரங்களுடன் ஆழமான ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், விமான சேவைகள் ஒப்பந்தத்தை புதுப்பித்து, இலங்கையின் இரத்தினம் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தாய்லாந்தின் இரத்தினம் மற்றும் ஆபரண நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam