இரணைமடுவில் மாபெரும் தைப்பொங்கல் திருவிழா
கிளிநொச்சி - இரணைமடு திருவருள் மிகு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் மாபெரும் தைப்பொங்கல் திருவிழா நடைபெற்றுள்ளது.
இந்த பொங்கல் நிகழ்வானது இரணைமடுக்குளத்தின் 104 ஆம் ஆண்டை முன்னிட்டு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது சம்பிரதாயபூர்வமாக புதிர் எடுத்து வரப்பட்டதைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
பொங்கல் நிகழ்வு
அத்துடன் பிரதான பொங்கல் பானை ஏற்றப்பட்டதையடுத்து 104 பானைகளில் பொங்கல் பொங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பாரம்பரிய கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகள்,விவசாயிகளுக்கான மதிப்பளித்தல் நிகழ்வுகள், பரிசளிப்பு நிகழ்வுகள் மற்றும் விருந்தினர் உரைகளும் இடம்பெற்றுள்ளன.
இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் வி. நடராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் கலந்து கொண்டிருந்ததுடன், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள், சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தினர், விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
