இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றில் தைப்பொங்கல் நிகழ்வு
இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக, தைப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று(24) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரை நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
புத்த சாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் வழிகாட்டலில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் குறித்த பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது.
தைப்பொங்கல் நிகழ்வு
அத்துடன் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து பொங்கல் நிகழ்வு நடைபெற்றதுடன் அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கு முன்னரும் நாடாளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தலைவராக இருந்த இராமலிங்கம் சந்திரசேகரனால் நவராத்திரி விழா நாடாளுமன்றத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |