சர்வதேச நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு உதவும் சுவிட்சர்லாந்து
இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட சொத்துக்களை மீட்பதில் சுவிட்சர்லாந்து தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரும் மாலைத்தீவுக்கான நியமிக்கப்பட்ட தூதருமான சிரி வோல்ட், இந்த ஆதரவை உறுதி செய்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது தூதர் வோல்ட் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
சர்வதேச நடவடிக்கைகள்
குறித்த சொத்துக்களை மீட்டெடுப்பதற்குத் தேவையான சர்வதேச நடவடிக்கைகள் குறித்து தூதர் வோல்ட் இதன்போது வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளார்.
அத்துடன், தேவையான போதெல்லாம், அத்தியாவசிய வளங்கள் மற்றும் உதவிகளை வழங்க சுவிட்சர்லாந்து தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு உதவ சுவிட்சர்லாந்தின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துவது குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதிலும், தேவையான உதவி மற்றும் வளங்கள் மூலம் வடக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவுவதிலும் சுவிட்சர்லாந்தின் உறுதிப்பாட்டை தூதர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |