இலங்கையில் நோய்வாய்ப்பட்டுள்ள தாய்லாந்து யானை தொடர்பில் கடும் விமர்சனம்
பெரும்பாலான தாய்லாந்து மக்களுக்குத் தெரியாத, இலங்கையில் நோய்வாய்ப்பட்டுள்ள, தாய்லாந்து யானையான சக் சுரின், தொடர்பில் தாய்லாந்தின் செய்தித்தளம் ஒன்றில் கடும் விமர்சன கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.
இலங்கையின் பல நகரங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா என்றும் அழைக்கப்படும் எசல பெரஹெராவில் இந்த யானை முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது.
இலங்கைக்கான தாய்லாந்தின் முன்னாள் தூதுவர் போல்டேஜ் வோராசாடடின் கருத்துப்படி, அதன் அழகான நீண்ட தந்தங்கள் மற்றும் குணாதிசயங்கள் காரணமாக, சக் சூரின், ஒவ்வொரு ஆண்டும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் 30க்கும் மேற்பட்ட எசல பெரஹெரா ஊர்வலங்களில் முக்கிய யானையாகப் பங்கேற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடினமாக உழைக்க வேண்டும்
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு நல்லெண்ண தூதர்களாக சாக் சுரின் உட்பட மூன்று யானைகள் அனுப்பப்பட்டன. 00 முதலில் 1979இல் ஒரு யானையும் பின்னர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சாக் சுரின் மற்றும் ஸ்ரீ நரோங். ஆகியனவும் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், திருவிழா வழக்கமாக இரவு 8 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் அதிகாலை 2 மணிக்கு முடிவடையும், இது ஏழு நாட்கள் நீடிக்கும், சுமார் 150 யானைகள் பங்கேற்கின்றன.
இதன் பொருள் யானைகள் இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மிகவும் கடினமாக உழைக்க வேண்டும், மேலும் ஏராளமான அலங்காரப் பொருட்களை முதுகில் சுமக்க வேண்டும்' என்று போல்டேஜ் கூறியுள்ளார்.
கொடூர நடைமுறை
எனவே, பாதுகாவலர்கள் இந்த நடைமுறையைக் கொடூரம் என்று அழைக்கிறார்கள்.
இலங்கையில் உள்ள யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், அவற்றைத் தாய்லாந்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தாய்லாந்தின் இலங்கைக்கான முன்னாள் தூதர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், நோய்வாய்ப்பட்டுள்ள சாக் சுரின் யானையை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி தாய்லாந்திற்கு விமானம் மூலம் வரவழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தாய்லாந்தின் செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
