டிட்வா புயலின் மற்றுமொரு தாக்கம்! கொழும்பில் களமிறக்கப்பட்டுள்ள 100 லொறிகள்
கொழும்பு புறநகர் பகுதிகளில், டிட்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து கழிவுகள் தேங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த கழிவுகளை சுமார் 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்ற எதிர்பார்ப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
தேங்கியுள்ள கழிவுகள்
தற்போது மேல் மாகாண அதிகார சபையினால் நாளாந்தம் சுமார் 100 லொறிகள் ஈடுபடுத்தப்பட்டு மிகவும் வெற்றிகரமான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று கூறியுள்ளார்.

இதனடிப்படையில், சுமார் 10 நாட்களுக்குள் அவர்கள், தேங்கி கிடக்கும் குப்பைகள் அனைத்தையும் அகற்றுவார்கள் என நான் நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
துப்புரவு பணிகள்
இந்த நிலையில், கொலன்னாவ பகுதியில் மாத்திரம் சுமார் 8,000 தொன் கழிவுகள் தேங்கியுள்ளதாகவும், அவற்றை சுமார் 2 நாட்களில் அகற்ற முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு மேலதிகமாக கொட்டிகாவத்தை, முல்லேரியா போன்ற பகுதிகளில் 10,000 முதல் 12,000 தொன் வரையிலான கழிவுகள் தேங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதும் சில வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் துப்புரவு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கழிவுகள் சேர்வது தொடர்ச்சியாக இடம்பெறுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri