மத்திய கிழக்கில் தொடர் போர் பதற்றம் - அமெரிக்காவிற்கு உதவிக் கரம் நீட்டும் தாய்லாந்து அரசு வெளியிட்ட தகவல்
மத்திய கிழக்கில் நீண்டகாலப் போர்ப் பணியை நிறைவு செய்த அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல், எதிர்வரும் வாரம் ஓய்வு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காகத் தாய்லாந்தை வந்தடையவுள்ளதாகத் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 5,000 கடற்படை வீரர்களைக் கொண்ட இந்த கப்பல், கடந்த சனிக்கிழமையன்று மத்திய கிழக்கிலிருந்து புறப்பட்டதுடன், தொடர்ச்சியாக 200 நாட்களுக்கும் மேலாக எந்தவித இடைநிறுத்தமும் இன்றி கடலில் பயணித்து நவீன காலத்தில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலிய போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த கப்பல் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.
அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுக்கும் தாய்லாந்து
இந்த கப்பலில் பணியாற்றும் வீரர்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும், தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், வீரர்களின் ஓய்வு மற்றும் தளவாடப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த பயணம் அமைந்துள்ளதாகத் தாய்லாந்து கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் கிழக்குப் பகுதியில் நங்கூரமிடவுள்ள இந்த கப்பற்படைக் குழுவினர் எந்தவித இராணுவப் பயிற்சிகளிலும் ஈடுபட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1954 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுடன் ஒப்பந்த நண்பர்களான, நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடாகவும் விளங்கும் தாய்லாந்துக்கும் அமெரிக்காவிற்கும் இடையே வலுவான இராணுவ உறவு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் அக்டோபருக்கு பின் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! எதற்கும் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை