முறையற்ற பாடப்புத்தக அச்சிடுதல் காரணமாக ஏற்பட்டுள்ள பெருந்தொகை இழப்பு
பாடசாலை மாணவர்களின் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களின் தேவை குறித்த உரிய மதிப்பீடு இன்றி, அச்சிடப்பட்டதன் மூலம் 9 கோடி ரூபாவுக்கும் அதிகளவான இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்களின் ஆண்டுத் தேவையை முறையாகக் கண்டறியாமல், பாடப்புத்தகங்களை அச்சடித்து, முறைசாரா முறையில் சேமித்து வைத்ததால், அரசுக்கு, 9 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணக்காய்வு அறிக்கையில் வெளியான தகவல்
2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை கல்வி வெளியீடுகள் திணைக்களம் வழங்கிய ஆண்டறிக்கைகளின் அடிப்படையில் தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.
தனியார் அச்சகங்கள் மற்றும் அரச அச்சகங்களில் இருந்து வரவேண்டிய பாடநூல்களின் ஏறக்குறைய 05 இலட்சம் பிரதிகளை உரிய முறையில் பெற்றுக்கொடுக்க கல்வி வெளியீடுகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என உரிய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
