எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பு: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் எரிவாயு கொள்கலன்களில் நிரப்பப்படும் எரிவாயுவின் கலவை குறித்து பரிசோதனை செய்யப்பட உள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
நாட்டின் பிரதான எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிற்றோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களின் கொள்கலன்களில் இருந்து நேற்றைய தினம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நுகர்வோர் விவகார பாதுகாப்பு அமைச்சர் லசந்த அலகியவன்ன நேற்று இது பற்றி அறிவித்துள்ளார்.
எரிவாயு மாதிரிகள் இன்று ஆய்வுகூட பரிசோதனைக்காக இன்று பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
எரிவாயு கொள்கலன்கள் தொடர்பில் லிற்றோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவித்தல்
எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சி விடுத்துள்ள கோரிக்கை
வெடித்து சிதறும் எரிவாயு சிலிண்டர்கள்! - காரணத்தை வெளியிட்ட முக்கிய நபர்

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Post Office திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்து முதிர்ச்சியில் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம்? News Lankasri

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
