புதிய CEOவை தேடும் டெஸ்லா நிறுவனம்
டெஸ்லாவின் இயக்குநர் குழு தலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விரைவில் விலக உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, எலான் மஸ்க் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைமை நிர்வாக அதிகாரி
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.
இதனால் ட்ரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் துறைக்கும் தலைமை வகித்திருந்தார்.
மின்சார வாகன தயாரிப்பாளரின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அரசியல் விவகாரங்களில் அதிகரித்து வரும் ஈடுபாட்டால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இதனால் டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய CEOவை தேர்ந்தெடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
