பயங்கரவாதம் பாகிஸ்தானின் போர் வியூகம்! எச்சரிக்கை விடுத்துள்ள மோடி
பயங்கரவாதம் மறைமுகமானப் போர் அல்ல என்றும் பாகிஸ்தானின் நேரடிப் போர் வியூகம் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத்தைத் ஆதரிப்பதன் மூலம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள மோடி ,
ஒப்பரேஷன் சிந்தூர்
''தனது அண்டை வீட்டாரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என நாம் விரும்புவோம். ஆனால் எங்கள் பலத்திற்கு சவால் விட்டால், இந்தியாவிடம் உள்ள நாயகர்களை அவர்கள் காண நேரிடும்.
இது மறைமுகமானப் போர் எனக் கூற முடியாது. ஒப்பரேஷன் சிந்தூரின்போது கொல்லப்பட்டவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்துள்ளது பாகிஸ்தான்.
அவர்களின் சவப்பெட்டியில் பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டிருந்தது. இராணுவ வீரர்கள் இறந்தவர்களின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்துகின்றனர்.
பயங்கரவாதிகளின் நடவடிக்கை மறைமுகமான போர் அல்ல என்பதை இது காட்டுகிறது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து பாகிஸ்தான் செய்வது மறைமுகப் போர் அல்ல நேரடியானப் போர்.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது அவர்களின் போர் வியூகம். அவர்கள் (பாகிஸ்தான்) போரில் ஈடுபாட்டுடன் இருந்தால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
