பாக் - இந்தியா பதற்றத்தின் நடுவில் இலங்கைக்கு அருகே வேவுபார்க்கவந்த சீன கப்பல்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான யுத்த முன்னெடுப்புக்கள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது, சீனா தனது வேவுக் கப்பல் ஒன்றை மெதுவாக இலங்கையின் தென் கடலுக்கு அனுப்பிவைத்திருந்தது.
கடந்த மே மாதம் 10ஆம் திகதி பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்படுகின்றது. 11ஆம் திகதி சீனா தனது வேவுக்கப்பலை இந்து சமுத்திரத்துக்கு அனுப்பிவைக்கின்றது.
12ஆம் திகதி இந்து சமூத்திரத்தில் சீனாவின் வேவுக் கப்பல் ஒன்று நடமாடுவதான செய்தி இந்தியாவை வந்தடைகின்றது.
13ஆம் திகதி அந்தக் கப்பல் மெதுமெதுவாக நகர்ந்து, 14ஆம் திகதி இலங்கைக்குத் தெற்காக - இலங்கையிலுள்ள சீனத் தளமான அம்பந்தோட்டைத் துறைமுகத்தில் இருந்து சிறிது தொலைவில் கடலில் தரித்துநின்றது.
கொடூரமான ஒரு யுத்த மேகம் இந்தியாவைச் சூழ்ந்துவிட்டிருந்த நிலையில், இந்தியாவுக்கு தெற்காக இருக்கின்ற கடற்பரப்பில் சீனா தனது வேவுக் கப்பலை அனுப்பியிருந்ததானது - இந்திய ஆய்வாளர்களைத் திகைப்பில் ஆழ்த்தியிருந்தது.
சீனாவின் அந்த வேவுக் கப்பல் எப்படியான பணிகளை இந்து சமுத்திரத்தில் மேற்கொண்டிருந்தது? அடிக்கடி இலங்கையிலும், இந்து சமுத்திரத்திலும் வந்து நிற்கின்ற இதுபோன்ற கப்பல்களினால் எப்படியான ஆபத்துக்கள் இந்தியாவுக்கு ஏற்படக்கூடும்?
குறித்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
