திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் மகிந்த பதுங்கியிருக்கலாம்! சம்பவ இடத்தை முற்றுகையிட்ட மக்கள் (video)
திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு முன்னால் தற்போது பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக் காரணமாக, நெருக்கடி நிலை உக்கிரமடைந்ததை அடுத்து நேற்றையதினம் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்றையதினம் அதிகாலை மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் திருகோணமலை வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போது திருகோணமலை கடற்படைத் தளத்தில் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் பதுங்கி இருக்கலாம் என தெரிவித்து கடற்படைத் தளத்திற்கு முன்னால் குழுமியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணொளி - அப்துல்சலாம் யாசிம்
மகிந்த குடும்பம் திருகோணமலையில் பதுங்கியுள்ளதாக தகவல்(Video) |








உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

Post Office திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்து முதிர்ச்சியில் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம்? News Lankasri
