கொழும்பில் பதற்ற நிலை - பொலிஸார் - ஆசிரியர்கள் கடும் மோதல்
கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு முன்பாக பொலிஸாருக்கும் ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்படடுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பான நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் உட்பட 44 பேரும் இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர். அதன்போது, அங்குவருகை தந்திருந்த ஆசிரியர்கள் சிலருக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கையை முன்வைத்து அதிபர்கள் , ஆசிரியர்கள் தொழிற்சங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதில் பெண்கள் உட்பட 44 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 44 பேருக்கும் கொரோனா பரிசோதனையின் முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளமையால் இவர்கள் அனைவரும் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri