ஹட்டன் நகரசபை கூட்டத்தில் பதற்ற நிலை - அதிரடியாக வெளியேறிய 9 உறுப்பினர்கள்
ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் மாதாந்திர கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், சபையில் இருந்து முக்கிய உறுப்பினர்கள் வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் நேற்றுமுன்தினம்(27.04.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சபையில் இருந்து 9 உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதுடன், ஒருவர் வாயில் பிளாஸ்டர் ஒட்டி தனது அமைதியான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 24ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் அறிக்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
சபையிலிருந்து வெளியேறிய உறுப்பினர்கள்
இதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் ஆரம்பித்தவுடன் ஆளும் கட்சி உறுப்பினரான வைத்தியர் தர்மபிரிய எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் சபையிலிருந்து வெளியேறியுள்ளார்.

அதன் பின்னர், முன்னாள் நகரசபை உறுப்பினரான அலகு முத்து நந்தகுமார், சபை அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரும் வெளியேறியுள்ளார்.
அறிக்கையை ஏற்க மறுத்து மற்ற உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர்.
அபிவிருத்தி பணிகளை தாமதப்படுத்த திட்டம்
இந்த சம்பவம் தொடர்பில், நகர சபைத்தலைவர் அசோக கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், சபை அறிக்கை என்பது முழுமையான விவரக்குறிப்பு அல்ல, சுருக்கமான பதிவு மட்டுமே, உறுப்பினர்கள் வெளியேறுவது அபிவிருத்தி பணிகளை தாமதப்படுத்தும் என்றார்.
இந்நிலையில், உறுப்பினர்கள் வெளியேறிய பின்னரும் தேவையான கூட்டத் தொகை இருந்ததால், ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உலகச்சந்தையில் உச்சம்தொட்ட எரிபொருள் விலைகள்! மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு