கொழும்பில் இரவில் ஏற்பட்ட பதற்ற நிலை - கடும் கோபத்தில் பயணிகள்
கொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகளின் செயற்பாட்டால் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலி நோக்கி செல்லும் இரவுநேர தபால் ரயில் பழுதடைந்ததால், கடலோரப் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டிக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் ரயில் பழுதடைந்துள்ளது. இதனால், மேலும் இரண்டு ரயில்கள் அந்தப் பாதையால் பயணிப்பதில் தாமதமாகின.
குழப்ப நிலை
இந்த நிலையில் சம்பவ இடத்தில் பயணிகள் ஆக்ரோஷமாக நடந்து செயற்பட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பயணிகளின் கடும் கோபத்தினால் அச்சமடைந்த என்ஜின் ஓட்டுநரும் உதவியாளரும் என்ஜின் அறைக்குள் நுழைந்து தங்களை தாங்களே பூட்டிக் கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாக தெரிவிக்கப்படுகிறது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
