யாழில் எரிபொருள் நிலையத்தில் இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டதால் குழப்பம் (Video)
யாழ்ப்பாணம் - அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்காக இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையால் அப்பகுதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விநியோகத்திற்கான பதிவு
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என பதிவுகளை முன்னெடுத்திருந்தனர்.
அதனை கேள்வியுற்று பலர் பதிவுகளை மேற்கொள்ள எரிபொருள் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
எனினும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், விவசாயிகளுக்கு விநியோகிக்கவே மண்ணெண்ணெய் உள்ளது எனவும், ஏனையோருக்கு வழங்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.
| எரிபொருள் கொள்வனவு செய்வோருக்கு அவசர அறிவுறுத்தல்! இன்று முதல் புதிய நடைமுறை |
விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய்
என்ற போதும் தொடர்ந்தும் இராணுவத்தினர் பதிவுகளை முன்னெடுத்துள்ளனர். அதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலாளருக்கும், புத்தூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மண்ணெண்ணெய்யை விவசாயிகளுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்க உள்ளதாகவும், இதனால் ஏனையோருக்கு விநியோகிக்க முடியாது எனவும் இராணுவத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளை இடை நிறுத்தியுள்ளனர்.




களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri