யாழில் ஒன்று கூடியுள்ள பெருமளவான மக்கள் - களமிறக்கப்பட்டுள்ள பொலிஸார்
யாழ். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வேரப்பட்டி கிராம சேவகர் பிரிவில் தொல்பொருள் சின்னம் இருப்பதாக தெரிவித்து அதனை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் அங்கு விஜயம் செய்யவுள்ள தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் (Vidura Wickramanayaka) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஒன்றுகூடியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அப்பகுதியில் பெருமளவான மக்கள் ஒன்றுகூடியுள்ளதால் அங்கு பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
காணியினை பிடித்து விகாரை அமைப்பதற்காக குறித்த அமைச்சரும், ஏனையோரும் வருவதாக தெரிவித்தே மக்கள் அவ்விடத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.
இதனால் அவ்விடத்தில் தற்போது பதற்றமா சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.








