சுவிட்சர்லாந்தில் ஓய்வு பெறவுள்ள பல்லாயிரக்கணக்கானோர்: புலம்பெயர்ந்தோருக்கு வாய்ப்பு
சுவிட்சர்லாந்தில் (Switzerland) 2030ஆம் ஆண்டளவில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் ஓய்வு பெற உள்ளதால் புலம்பெயர்ந்தோருக்கு வேலை வாய்ப்பளிக்க 'OECD' அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
2029ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்தில் 130,000 பணியாளர்கள் பணி ஓய்வு பெற உள்ளனர்.
இதனால், அந்த பற்றாக்குறைகளை நிரப்ப போதுமான பணியாளர்கள் சுவிட்சர்லாந்தில் இருக்கமாட்டார்கள் என சர்வதேச நாணய நிதியமும், 'Raiffeisen' வங்கியும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சுமார் 200,000 பணியாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
ஆலோசனைகள்
இதேவேளை, இந்த ஆண்டு மட்டும் சுமார் 114,000 பணியிடங்களுக்கு ஊழியர் பற்றாக்குறை இருந்ததாக பெடரல் புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மருத்துவத்துறை நிபுணர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் பெரும் பிரச்சினை காணப்படுகிறது.
எனவே, குறித்த பணியாளர் பற்றாக்குறைகளை நிரப்ப சர்வதேச நாணய நிதியம், Raiffeisen வங்கி மற்றும் 'OECD' முதலான அமைப்புகள் சில ஆலோசனைகளைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
