வீசா சர்ச்சை காரணமாக நாடு திரும்பும் பிரபல டென்னிஸ் வீராங்கனை
வீசா சர்ச்சை காரணமாக அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் பங்குபற்றாது, செக் குடியரசுகளின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை ரெனாடா வொராகொவா தாய்நாடு திரும்புகின்றார்.
நட்சத்திர டென்னிஸ் வீர்ர் நொவாக் ஜோகோவிச்சின் வீசா ரத்து செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வொராகொவாவும் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் இரட்டையர் பிரிவில் வொராகொவா பங்கேற்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீசா ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீடு செய்யாது, வொராகொவா அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவாக செக் குடியரசுகளின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வெராகொவாவும் கோவிட் தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகோவிச் போன்றல்லாது, வெராகொவா ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் பயிற்சி போட்டியொன்றில் பங்கேற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நட்சத்திர வீரர் ஜோகொவிச் வீசா மறுக்கப்பட்டமைக்கு எதிராக சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்ய உள்ளார்.
அகதிகளை தங்க வைக்கும் ஹோட்டல் ஒன்றில் தாம் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மிகவும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கைதியை போன்று அதிகாரிகள் தம்மை நடாத்துவதாகவும் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
உலக டென்னிஸ் தர வரிசையில் முதனிலை வகிக்கும் ஜோகோவிச், அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரின் நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
ஆதி பிளாக் மெயில் செய்ததால் தற்கொலை செய்துகொண்டு இறந்த இலங்கை பெண்... தாமரைச்செல்வி ஷாக்கிங் நியூஸ் Cineulagam
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri