வடக்கைச் சேர்ந்த பத்து பேர் தமிழகத்தில் தஞ்சம்(Video)
இலங்கையில் இருந்து இன்று காலை 10 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாக பலரும் தமிழகத்துக்குத் தப்பிச் செல்ல முனைகின்றனர்.
தமிழகத்தில் தஞ்சம்

அந்தவகையில் இன்று காலையும் 10 பேர் தமிழகத்தின் தனுஸ்கோடியைச் சென்றடைந்தள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களில் 5 ஆண்களும், 2 பெண்களும், 3 சிறுவர்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி 10 பேரில்,வவுனியா மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த உதயசூரியன் அவரது மனைவி பரிமளம் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் மற்றும் வவுனியா மாவட்டம் புவரசம் குளம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கை மன்னாரில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இன்று புதன்கிழமை (23) காலை சென்றடைந்தனர்.
அகதிகள் எண்ணிக்கை
தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் போலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழ வழி இல்லாததால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து சென்ற அகதிகள் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி-ஆஷிக்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam