பத்து புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்
பத்து புதிய அமைச்சர்கள் இன்றைய தினம் அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ள அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளாவிட்டால் நாளை மறுதினம் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஐந்து அமைச்சுப் பதவிகளும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும், ஏனைய தரப்பினருக்கு மூன்று அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட உள்ளத்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திலும் அமுனுகம, எஸ்.எம். சந்திரசேன, ஜனக வக்கும்புர, விதுர விக்ரமநாயக்க, ஷெஹான் சேமசிங்க, மஹிந்த அமரவீர போன்றவர்களுக்கு அமைச்சு பதவி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சம்பிக்க ரணவக்கவிற்கு அமைச்சுப் பதவி வழங்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதனை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதனை அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை என கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் 13 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் மேலும் சில பிரதி அமைச்சர்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam