விவசாயிகளுக்கு தலையிடியாக மாறியுள்ள அரசாங்கத்தின் தீர்மானம்! இடை நிறுத்தப்படும் கொடுப்பனவு
தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கும் மேலாக தமது ஓய்வூதியக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளாத பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல்களைத் தடுப்பதே இந்த தீர்மானத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள்
தற்போது விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையின் ஊடாக 179,215 விவசாயிகளும் 6,381 கடற்றொழிலாளர்களும் கொடுப்பனவுகளைப் பெறுகின்றனர்.

சுமார் 6,105 பயனாளிகள் கடந்த ஆறு மாதங்களாகத் தமது ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விவசாய அமைச்சு இது தொடர்பாக வெளியிட்டுள்ள விபரங்களின் படி ,இது நிரந்தரத் தடையல்ல. குறித்த பயனாளி உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர், தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கொடுப்பனவுகள் மீண்டும் வழங்கப்படும்.
நிலுவையில் உள்ள அனைத்துக் கொடுப்பனவுகளும் (Arrears) முறையாகப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தொடர்பான ஏதேனும் விசாரணைகள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின், விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையின் 1918 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam