இலங்கைக்கு செல்வோருக்கு புதிய நடைமுறை
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆகஸ்ட் மாதம் முதல், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை விமான நிலையங்களில் பெற முடியும் என மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
ஊடக அறிக்கையொன்றின் ஊடாக அந்த அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கை நாட்டில் இருக்கும்போது வாகனம் செலுத்த விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கான செயன்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்
சுற்றுலாப் பயணிகள் தங்கள் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்காக வெரஹெரவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு செல்ல வேண்டும் இருந்தது.
இது பெரும்பாலும் சிரமமான மற்றும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் என கருதப்படுவதால், இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப செயன்முறை மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த மேலதிக விபரங்கள் எதிர்வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



