நத்தார் காலத்தில் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ள யுக்திய நடவடிக்கை
போதைப்பொருளுக்கு எதிரான யுக்திய நடவடிக்கைகள் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பணிப்பாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மாறாக, இந்த காலத்தில் கத்தோலிக்க தேவாலயங்களைப் பாதுகாப்பதில் முன்னுரிமை வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிரான யுக்திய நடவடிக்கைகள் குறைக்கப்பட்ட போதிலும், பொது மக்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் சோதனைகளை நடத்த தயாராக உள்ளதாகவும் தல்துவ சுட்டிக்காட்டியுள்ளார்.
யுக்திய நடவடிக்கைகள்
கடந்த ஆறு நாட்களில் மட்டும், யுக்திய நடவடிக்கையின் மூலம் 12,132 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் முலம், 8 கிலோகிராம் ஹெராயின், 4 கிலோகிராம் ஐஸ் மற்றும் 269 கிலோகிராம் மரிஜுவானா ஆகிய போதைப்பொருட்கள் இந்த காலப்பகுதிக்குள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 636 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெற்று விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அத்துடன் 151 நபர்களிடம் சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு 998 பேர் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




