ஆளுநரால் விடுக்கப்பட்ட பணிபுரையை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட ஆலய வழிபாடு
யாழ்ப்பாணம்(Jaffna) தெல்லிப்பழை சிறுவர் இல்லம் மற்றும் தெல்லிப்பளை சிறுவர் இல்லம் ஆகியவற்றை இழுத்து மூடுமாறு ஆளுநரால் விடுக்கப்பட்ட பணிபுரையை எதிர்த்து இன்று ஆலய வழிபாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆறு திருமுருகன் அவர்களால் நீண்ட காலமாக நடத்தப்பட்டுவரும் சிறுவர் இல்லத்தில் சிறுமிகள் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு கெமரா ஒன்று பொருத்தப்பட்டு இருப்பது என்ற விடயத்தை முன்வைத்து ஆளுநரால் குறித்த சிறுவர் இல்லத்ததை மூடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.
பூஜை வழிபாடுகள்
இதனை யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பத்திரிகை ஒன்று தனது முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

எனவே ஆதரவற்ற சிறுவர்கள், சிறுமிகள் மாற்றுவலுவுள்ளோர் என பல்வேறுபட்டவர்களை ஆதரிக்கும் ஆறு திருமுருகனின் குறித்த பணியை செய்ய விடாது வடக்கு மாகாண ஆளுநர் மதத்தை அடிப்படையாகக் கொண்டு சிறுவர் இல்லத்தை மூடுமாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இது கிறிஸ்தவ மதத்தின் சைவ மதத்திற்கும் இடையே முரண்பாட்டை தோற்றுவிப்பதாகவும் இதனை ஊடக தர்மத்தை தாண்டி பத்திரிகையில் பிரசித்தமை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலயத்தில் தேங்காய்கள் உடைத்து ஆறு திருமுருகன் அவர்களுக்கு ஆசி வேண்டி குறித்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதனை ருத்ர சேனை சிவ சேனை ஆகிய அமைப்புக்கள் மற்றும் சைவ தலைவர்கள் சிலர் மேற்கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri