மட்டக்களப்பு ஆலயமொன்றில் இடம்பெற்ற திருட்டு! பொலிஸாரின் அசமந்த போக்கு
மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை நகர் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டு மிக தொன்மை வாய்ந்த சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் களவாடப்பட்டமை குறித்து பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயத்தின் கும்பாபிஷேக பணிகளுக்காக ஆலய எழுந்தருளி விக்கிரகம் உள்ளிட்ட தொன்மை வாய்ந்த விக்கிரகங்கள், பூசை பொருட்கள் உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டடிருந்த நிலையில் மூலஸ்தானம் உடைக்கப்பட்டு சிலைகள், பூஜைப் பொருட்கள் என்பன களவாடப்பட்டுள்ளன.
திருட்டுச் சம்பவம்
அத்துடன் ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டு பணமும் திருடப்பட்டுள்ளது.\\
கடந்த 14 ஆம் திகதி அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் அங்கிருந்த சிசிரிவி கமராவிலும் குறித்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினரால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை எந்த வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வில்லை என ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர்.






பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri