மட்டக்களப்பில் ஆலய உண்டியல் திருட்டு(Video)
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் உண்டியல் இன்று(04) முற்பகல் சுமார் 10 மணியளவில் களவாடப்பட்டுள்ளதாக அந்த ஆலயத்தின் தலைவர் இ.ரமேஸ் தெரிவித்துள்ளார்.
திருட்டு சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், “வழக்கம் போன்று ஆலயத்தின் தின பூஜை செய்வதற்காக சென்ற அவ்வாலய குருக்கள் ஆலயத்தினுள் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போயுள்ளதை அவதானித்துள்ளார்.
ஆலயத்தின் உட்புறத்தை சுற்றிப் பார்த்தவேளை ஆலயத்தினுள் வடக்குப்புறமாக குறித்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை அவதானித்துள்ளார். பின்னர் ஆலய தலைவருக்கு அறிவித்துள்ளார்.

வழக்கமாக ஆலயத்திற்கு பகல் காவலாளி வைப்பதில்லை, கதிர்காம பாத யாத்திரிகர்கள் ஆலயத்திற்கு வந்து செல்வதனால் ஆலயத்தின் முன் வாயிற் கதவு பகலில் திறந்து விடப்பட்டுள்ளன.
பொலிஸ் முறைப்பாடு


இந்நிலையில் முற்பகல் வேளையில் யாரோ மிகவும் தந்திரத்தனமாதன முறையில் ஆலயத்தினுள் உட்புகுந்து முன்னாள் வைத்திருந்த உண்டியலை எடுத்து ஆலயத்தின் வடக்கு பக்கமாக கொண்டு வைத்து ஆலயத்திலிருந்த சூலத்தை எடுத்து உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது எமக்குத் தெரியாது.
இந்த விடயம் குறித்து களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு நாம் அறிவித்துள்ளோம்.”என
தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri