இலங்கை மக்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ள இரு வேறு விதமான எச்சரிக்கைகள்
நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று (17.04.2026) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவுறுத்தலின்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திலும் இந்த வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
உடல் சோர்வு ஏற்படக்கூடும்
வெப்பச் சுட்டெண் அதிகரிப்பதன் காரணமாக, நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு அதிக உடல் சோர்வு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இக்காலப்பகுதியில் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் இன்று (17) பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மேல், சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பனிமூட்டம்
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டம் ஏற்படக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam