மோடி திறந்து வைத்த முக்கிய அபிவிருத்தி திட்ட கட்டடத்தின் மின்சாரம் துண்டிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட தம்புள்ளையில் உள்ள வெப்பநிலை கட்டுப்பாட்டு விவசாய கிடங்கிற்கு, சேவைகள் தொடங்குவதற்கு முன்பே ரூ. 8,409,000 மின்சாரக் கட்டணம் பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இன்று (15) தம்புள்ளைக்கு விஜயம் செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குழுவினால் குறித்த விஜயத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
மேலும், வெப்பநிலை கட்டுப்பாட்டு விவசாய கிடங்கிற்கு உரிய மின் கட்டணம் செலுத்தப்படாததால், அதற்கான மின்சாரம் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விவசாய கிடங்கு
இந்த வெப்பநிலை கட்டுப்பாட்டு விவசாய கிடங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் முன்மொழிவைத் தொடர்ந்து கட்டப்பட்டது.
அதன்படி, அதன் திறப்பு விழா ஏப்ரல் 5 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் நடைபெற்றது.
மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி இந்த திட்டம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் அன்று முதல் இன்று வரை அங்கு சேவைகள் நடைபெறாதது குறித்து விசாரிக்க, உதய கம்மம்பில, சஞ்சீவ எதிரிமன்ன, பிரேமநாத் சி. தொலவத்த, சுகீஸ்வர பண்டார, நிமல் பியதிஸ்ஸ, தம்புள்ளை முன்னாள் மேயர் ஜாலிய ஓபத உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




