செம்மணி நூல் வெளியீட்டை பகிஷ்கரித்த பிரதி அமைச்சர்
செம்மணி மனித புதைக்குழி அவலங்கள் தொடர்பான சிங்கள நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்த தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் எவ்வித அறிவித்தலும் வழங்காமல் பகிஷ்கரித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செம்மணி மனித புதைக்குழி அவலங்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்த தரிந்து ஜயவர்தன மற்றும் தரிந்து உடுவேகெதர, எம்.எப்.எம்.பஷீர் ஆகியோர் இணைந்த சிங்கள மொழியில் வெளியிட்ட 'செம்மணி' என்ற சிங்கள நூல் நேற்று(14) வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு நுலகம் மற்றும் ஆவணவாக்கல் சபை மண்டபத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.
விமர்சனம்
நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பல பிரபலங்கள் அழைக்கப்பட்டிருந்த போதும், அவர்கள் அனைவரும் வருகைத் தந்திருந்த நிலையில் சிறுபான்மையின பிரதியமைச்சராகவும் தேசிய ஒருமைப்பாடுக்கு பொறுப்பானவர் என்ற வகையில் முனீர் முளப்பரின் பிரசன்னம் எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் அவர் எதுவும் சொல்லாமல் நிகழ்வுக்கு வரவில்லை.
நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய நூலை எழுதியவர்களில் ஒருவரான தரிந்து ஜயவர்தன பிரதியமைச்சர் வராதாதை விமர்சித்து பேசினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




