யாழ் தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்
வரலாற்று சிறப்புமிக்க யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
மகோற்சவ பெருவிழாவில் இன்று காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
விசேட பூஜைகள்
காலை வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் முருகப்பெருமான் ஆகியோருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் இருந்து மூர்த்திகள் கொடிக் கம்பத்திற்கு எழுந்தருளி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம் இனிதே நடைபெற்றது.
12 நாட்களை கொண்ட இவ்வாலய மகோற்சவத்தில் பத்தாம் நாள் திருவிழாவாக எதிர்வரும் 3ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 11ஆம் நாள் திருவிழாவாக எதிர்வரும் 4ஆம் திகதி ரத உற்சவமும், 12ஆம் நாள் திருவிழாவாக எதிர்வரும் 5ஆம் திகதி தீர்த்த உற்சவமும் சிறப்பாக நடைபெற உள்ளது.
பெருமளவு பக்தர்கள் படையெடுப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இவ்வாலய மகோற்சவ பெருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











