விடுதலை புலிகளை அங்கீகரிக்கின்றதா கனடா..! இலங்கையின் கடுமையான நிலைப்பாடு
கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தொடர்பான சின்னங்களை பொதுவெளியில் பயன்படுத்துவது மற்றும் பிரிவினைவாதச் சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து கனேடிய அரசாங்கத்திடம் இலங்கை தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கேத்ரின் மார்ட்டின் உடனான சந்திப்பில் இந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
கனடாவின் உறுதிப்பாடு
கனடாவில் உள்ள உள்ளூர் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பலவீனப்படுத்துவதாகவும், கட்டுப்படுத்தப்படா விட்டால் இருதரப்பு உறவுகளைப் பாதிக்கலாம் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போதும் கனடாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்றும், அதன் சின்னங்களையோ அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களையோ கனேடிய மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், கனடா எப்போதும் இலங்கையின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவாக உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |