வரலாற்றில் முதன்முறையாக தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேவை
இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களின் வரலாற்றில் முதன்முறையாக குறுந்தகவல் மூலமாக ஆலய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடிய சேவை முறையானது தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவை தேவஸ்தானத்தின் தலைவர் ஆறு திருமுருகனால் நேற்று (07.12.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் ஆற்றப்பட்டு வரும் பல்வேறு சமூக நலத்திட்ட பணிகள், ஆலய விசேட உற்சவங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய முழுமையான விபரங்களை எவ்வித கட்டண அறவீடுமின்றி இலவசமாக அறிந்து கொள்ள முடியும்.

குறித்த சேவையினை பெற்றுக் கொள்வதற்கு கீழ்வரும் முறை மூலம் இணைந்துகொள்ள முடியும். https://www.tellidurga.org என்ற தேவஸ்தானத்தின் இணையத்தள முகவரிக்கு சென்று தங்களுடைய தொலைபேசி இலக்கங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
தொலைபேசி இலக்கங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் OTP முறை (One-Time Passwords Authenticate System) பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri