ரெலிகொம் அரச பங்குகள் தமிழரின் நிறுவனத்திற்கா..! சபையில் எழுந்த சர்ச்சை
இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை தமிழரொருவருக்கு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், எதிரணி சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டின் பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் ஆபத்தான நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (23.03.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் பொருளாதார மீட்சியின் தந்தையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அரச தரப்பினர் கருதுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
