பிரித்தானியாவில் இளம் தாயாரை கொலை செய்த இளைஞன் தப்பியோட்டம்
பிரித்தானியாவில் (United Kingdom) பச்சிளம் குழந்தையுடன் சென்ற இளம் தாயார் ஒருவரை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பியோடிய கொலையாளியை பிரித்தானிய பொலிஸார் தேடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கொலைச் சம்பவமானது கடந்த சனிக்கிழமை (06.04.2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், கண்காணிப்பு கமெராவில் சிக்கிய காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர் 25 வயதுடைய Habibur Masum என அடையாளம் கண்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதனிடையே, கொலை செய்யப்பட்ட பெண் தினமும் செல்லும் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான 69 வயதுடைய Geo Khan என்பவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வர்த்தகர், தமது கடையில் கொலைசெய்யப்பட்ட பெண் வழக்கமான வாடிக்கையாளர் என்றும் திடீரென்று அலறல் சத்தம் கேட்டவுடன் தாம் கடைக்குள் இருந்து வெளியே விரைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்பொழுது பெண் ஒருவர் நடைபாதையில் விழுந்து கிடந்ததாகவும், அவரது 5 மாத குழந்தை சக்கர நாற்காலியில் இருந்தது என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் அவரது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் காணப்பட்டதாகவும், உயிர் பிரிந்திருந்ததை தாம் உணர்ந்ததாகவும் வர்த்தகரான Geo Khan பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கான வலியுறுத்து
இந்நிலையில் விசாரணைகளை முடக்கி வைத்துள்ள பொலிஸார், கொலையாளி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தற்போது தேடப்பட்டுவரும் நபர் 25 வயதுடைய Habibur Masum என்ற மான்செஸ்டர் அருகே உள்ள ஓல்ட்ஹாம் பகுதியில் வசித்து வருபவர் எனவும், ஆசிய நாட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கொலை செய்யப்பட்ட பெண் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri