தாய் வெளிநாடு சென்ற நிலையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்
சிலாபத்தில், சிறுமியான தனது காதலிக்கு கருக்கலைப்பு செய்யும் சட்டவிரோத மருந்தினை கொடுத்ததாக கூறப்படும் இனைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 12ஆம் திகதி மதியம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம்-வெல்ல பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞராகும்.
15 வயதுடைய சிறுமி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியின் காதலன் கைது
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருந்தொன்றை பயன்படுத்தியமையினால் சிறுமிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் சிலாபம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேக நபரான சிறுமியின் காதலன் கைது செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியின் தாய் சுமார் 03 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், சகோதரியுடன் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
நெருக்கமான உறவு
இந்தக் காலப்பகுதியில் அந்தப் பகுதியிலுள்ள இளைஞனுடன் ஏற்பட்ட நெருக்கமான உறவு காரணமாக கர்ப்பம் அடைந்தமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சிறுமியை பாலியல் ரீதியான தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு, கர்ப்பத்தை சட்டவிரோதமாக கலைத்த குற்றச்சாட்டில் சந்தேக நபரான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




